5,500 ரோஜா மலர்களால் ஆன பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம்...

 
சாண்டா


உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25)  கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  வண்ண வண்ண விளக்குகளல் அலங்கரிக்கப்பட்டு தேவாலயங்கள் ஒளிர்கின்றன. ஏராளமான பொதுமக்கள் தேவாலங்களில் குழுமி, சிறப்பு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் குடில்கள், பொம்மைகள், கேக்குகள் என கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுகிறது.

சாண்டா கிளாஸ்

அந்தவகையில், ஒடிசாவைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் , ரோஜா மலர்களைக் கொண்டு 50 அடி நீள கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பத்தை வடிவமைத்திருக்கிறார்.  50 அடி நீளமும், 28 அடி அகலமும் கொண்ட  இந்த சாண்டா கிளாஸ் சிற்பத்தை 5,400 ரோஜா மலர்கள் மற்றும் வேறு சில பூக்களையும் கொண்டு வடிவமைத்திருக்கிறார். இதற்காக சுதர்சனும் அவரது குழுவினரும் 2 நாட்களாக ஆயத்தமாகி, 8 மணி நேரத்தில் சாண்டா கிளாஸ் சிற்பத்தை வடிவமைத்திருக்கின்றனர்.

சாண்டா கிளாஸ்

மேலும் அவர் கிறிஸ்துமஸ் விழாவை கொரோனா விதிமுறைகளை மீறாமல் கொண்டாடி மகிழுங்கள்  என்று எழுதியிருக்கிறார்.  அதேபோல் மணல் சிற்ப கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு முகக்கவசம் அணிவித்திருந்தார். ஏற்கனவே பல சாதனைகளை படைத்திருக்கும் சுதர்சன் பட்நாயக், இந்த பிரம்மாண்ட மணல் சிற்பத்தின் மூலம் புதிய சாதனையை படைப்பார் என்று கூறப்படுகிறது.

சாண்டா கிளாஸ்

ஒடிசா மாநிலத்திலும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஓட்டல்களில் கொண்டாட்டங்கள், இரவு கொண்டாட்டங்களுக்கு முற்றிலும் தடை    அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலயங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.