மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்.

 
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்.

மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காந்தி உடல்நலக்குறைவு காரணமாக (89) காலமானார்!

சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காந்தி.  இவர் மகாத்மா காந்தியின் மகன்  மணிலால் காந்தி - சுசீலா மஷ்ருவாலா தம்பதிக்கு கடந்த 1934ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தவர்.  தனது தாத்தா காந்தியின் அடிச்சுவடுகளை பின்பற்றி சமூக ஆர்வலராகவும், எழுத்தாளராகவும் வாழ்ந்து வந்தார். மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில்  வசித்துவந்த அவர்  உடல்நலக்குறைவால்  இன்று  காலமானார். அவருக்கு வயது 89.  அருண் மணிலால் மறைவை அவரது மகன் துஷார் காந்தி  மற்றும் குடும்ப வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.  அவரது  இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகலில் கோலாப்பூரில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

gandhi

இவர், கடந்த  2017ல் The Gift of Anger: And Other Lessons From My Grandfather Mahatma Gandhi உள்ளிட்ட சில புத்தகங்களை வெளியிட்டார். மேலும்  தான் எழுதிய கட்டுரையில் இந்திய அரசாங்கத்தையும்  அருண்காந்தி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின்  நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டரில் வசித்து வந்த அருண், பின்னர் இந்தியாவுக்கு வந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியேறினார்.  இவருக்கு துஷார், அர்ச்சனா என்ற 2  பிள்ளைகள் உள்ளனர்.  இந்த நிலையில்  உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய அருண் காந்தி  மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.