9 மணி நிலவரப்படி சத்தீஷ்கரில் 9.93%, மிசோரமில் 12.80% வாக்குகள் பதிவு

 
election

நடந்து வரும் சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் உள்ள தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மிசோரம் மற்றும் சத்தீஷ்கரில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் சத்தீஷ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.  223 பேர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 25 பெண்களும் அடங்குவர். இரண்டு மாநிலங்களிலும் இன்று வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

voter turn out

இந்த நிலையில், நடந்து வரும் சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் நடைபெறும் சத்தீஷ்கரில் காலை 9 மணி நிலவரப்படி  9.93% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மிசோரமில் 12.80% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.