காதலி மற்றும் அவரது தாயை கொடூரமாக கொன்ற இளைஞர்- பகீர் பின்னணி

 
ச்

காதலித்த பெண்ணை திருமண செய்து தர மறுத்ததால் தாய், காதலியை கத்தியால் குத்தி கொலை  செய்த காதலனின் கொடூர செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ச்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் வசித்து வருபவர் லட்சுமி (43). இவரது மகள் தீபிகா ( 20 ) டிகிரி முடித்து வீட்டில் உள்ளார். தீபிகாவும் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த நவீன் என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர். இந்த நிலையில் நவீன் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து திருமண ஏற்பாடுகளை தீபிகா பெற்றோர் நிறுத்தினர். 

ச்

இந்த நிலையில் இன்று மதியம் தீபிகா வீட்டிற்கு வந்த நவீன், திருமணம் குறித்து பேச ஆரம்பித்தார். ஆனால் திருமணத்திற்கு விருப்பம் இல்லை என தீபிகா கூறியதால் ஏற்கனவே திட்டமிட்டு கொண்டு வந்த கத்தியால் தீபிகாவை தாக்கினார். அதனை தடுக்க முயன்று  தீபிகா தாய் லட்சுமியை கத்தியால் குத்தினார். இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தீபிகாவை உள்ளூர்வாசிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் நவீன் பைக்கில் தப்பி ஓடிய நிலையில், போலீசார் செல்போன் எண்ணை ஆதாரமாக கொண்டு நவீனை தேடி வந்தனர். இதற்கிடையில் தீபிகாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நவீனை ஸ்ரீகாகுளம் அருகே கைது செய்தனர்.