பாலசோர் ரயில் விபத்து - அடையாளம் காண முடியாத நிலையில் 29 சடலங்கள்

 
train accident

பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் அடையாளம் காண முடியாத நிலையில் 29 சடலங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn

கடந்த ஜூன் 6ஆம் தேதி  முன்பு ஒடிசா ரயில் விபத்தில் சுமார் 289 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவம் குறித்து சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது. அதில் தானாக செயல்படும் மின்னணு இன்டெர்லாக் அமைப்பில் மனிதர்கள் தலையிட்டு சிக்னலை மாற்றியது தெரியவந்தது . எலக்ட்ரானிக் இன்டெர்லாக் அமைப்பில் வேண்டுமென்றே குறுக்கீடு  செய்ததால் ஒடிசா ரயில் சோகம் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறும் நிலையில், இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
tn

இந்நிலையில் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர்.அதில் 162 பேரது சடலங்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளது.  ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 29 பேரின் சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸ் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.  

டெல்லியில் இருந்து இறுதிக்கட்ட டிஎன்ஏ மாதிரிகளின் முடிவுகள் விரைவில் வந்துவிடும். அதன் அடிப்படையில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படும் .உரிமை கோராமல் மீதம் இருக்கும் உடல்களை தகனம் செய்வது குறித்து மாநில அரசை முடிவெடுக்கும் என்று புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.