வேட்டிக்கு தடை- பெங்களூரு வணிக வளாகத்தை மூட உத்தரவு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிவந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த வணிக வளாகத்தை மூடும்படி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள பிரபலமான மால்களில் ஒன்றான ஜிடி மாலுக்கு நேற்று மாலை விவசாயி ஒருவர் வேஷ்டி அணிந்தவாறு தனது மகனை அழைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றுள்ளார். கையில் படம் பார்க்க டிக்கெட் இருந்த நிலையில் அவர் உள்ளே நுழைந்தபோது மாலின் காவலாளி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். படம் பார்க்க டிக்கெட் இருந்த போதிலும் விவசாயி வேஷ்டி அணிந்திருந்த காரணத்தினால் அவரை உள்ளே விட முடியாது என்று காவலாளி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக விவசாயி காவலாளியிடம் படம் பார்க்க செல்ல அனுமதி கோரி உள்ளார்.
This elderly man in dhoti couldn't get into a Bengaluru mall even though he had movie tickets.
— Sneha Mordani (@snehamordani) July 17, 2024
Yes, he was denied entry because of his attire!
Where are we heading as a nation? Progressing doesn't
mean wearing modern clothes only, it's about evolving mindsets too. pic.twitter.com/sflgzQGSgk
இந்த நிகழ்வை கண்டித்து இன்று கன்னட அமைப்புினர்கள் நூற்றுக்கணக்கானோர் மாலின் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாலுக்கு எதிராகவும் இந்த செயலுக்கு எதிராகவும் போராட்டத்தின் போது கண்டனம் முழக்கங்கள் பதிவு செய்யப்பட்டது. கன்னட அமைப்புகளின் போராட்டம் காரணமாக அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.