"இந்த 6 நாட்கள் வங்கிகளுக்கு செயல்படாது” - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

 
வங்கிகள்

ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் வந்தாலே விடுமுறைகளும் வந்துவிடும். குறிப்பாக கிறிஸ்துமஸ் தொடங்கிய புத்தாண்டு வரை ஒரு வாரத்திற்கு விடுமுறை தான். வங்கிகளுக்கும் தான்.  டிசம்பர் மாதம் முடிந்து புத்தாண்டு தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே மிச்சம் உள்ளன. இதில் ஆறு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இதனால் பொதுமக்களின் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. 

Modi govt's guarantee-free loans for MSMEs: These PSU banks offer maximum  credit to small businesses - The Financial Express

சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கலாம். மற்ற மாநிலங்களில் இருக்காது. அந்த வகையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

டிசம்பர் 24 - கிறிஸ்துமஸ் ஈவ்

டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்

டிசம்பர் 26 - ஞாயிறுக்கிழமை பொது விடுமுறை

டிசம்பர் 27 - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (மிசோரம் மாநிலத்தில் மட்டும்)

டிசம்பர் 30 - யூ கியாங் நங்பா (இமாச்சலப் பிரதேச மாநில வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

டிசம்பர் 31 - நியூ இயர் ஈவ் (மிசோரம் மாநிலத்தில் மட்டும்)

Alternative Christmas Visitors | Britannica

விடுமுறை நாட்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுகொண்டுள்ளது. எனினும் ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும். ஆகவே நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டிய திட்டம் இருந்தால் மட்டும் வங்கிகள் இருக்குமா இல்லை விடுமுறையா என்று தெரிந்துகொள்ளலாம்.