நொடிப்பொழுதில் சட்டென சரிந்த அடுக்குமாடி கட்டடம்! அதிர்ச்சி காட்சி
பெங்களூருவில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வெளுத்து வாங்கும் கனமழையால் பெங்களூருவில் புதிதாக கட்டப்படும் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட கட்டுமான தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பெங்களூருவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களில் 6 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
*#BREAKING | பெங்களூருவில் கட்டப்பட்டுவந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு!*
— Pudukkottai Page (@pudukkottai_pag) October 22, 2024
கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த 17 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தகவல்
6 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது pic.twitter.com/rnvjJVfnEW
பெங்களூருவில் கடந்த ஒருவாரமாக கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மழை நீரில் மூழ்கி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதம், மீட்பு படகுகள் மூலம் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவருவது குறிப்பிடதக்கது.