வேட்டி கட்டிய முதியவருக்கு அனுமதி மறுத்த ஷாப்பிங் மாலுக்கு சீல்

 
ல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிவந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த வணிக வளாகத்தை சீல் வைத்து கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

பெங்களூரு

பெங்களூரு நகரில் உள்ள பிரபலமான மால்களில் ஒன்றான ஜிடி மாலுக்கு நேற்று மாலை விவசாயி ஒருவர் வேஷ்டி அணிந்தவாறு தனது மகனை அழைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றுள்ளார். கையில் படம் பார்க்க டிக்கெட் இருந்த நிலையில் அவர் உள்ளே நுழைந்தபோது மாலின் காவலாளி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். படம் பார்க்க டிக்கெட் இருந்த போதிலும் விவசாயி வேஷ்டி அணிந்திருந்த காரணத்தினால் அவரை உள்ளே விட முடியாது என்று காவலாளி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக விவசாயி காவலாளியிடம் படம் பார்க்க செல்ல அனுமதி கோரி உள்ளார். இந்த நிகழ்வை கண்டித்து கன்னட அமைப்புினர்கள் நூற்றுக்கணக்கானோர் மாலின் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

GT World Mall news: Protest after farmer denied entry to Bengaluru's Mall

இந்நிலையில் ரூ.1.78 கோடி வரி செலுத்தாததால் பெங்களூருவில் உள்ள ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வேட்டி அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த ஜிடி வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.