இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு- பீகார் அரசு அதிரடி

 
ச் ச்

ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய இந்தியர் என்ற சாதனையை படைத்த 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்தார்.

Image

நடப்பு ஐபிஎல் தொடரிற்கான ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இந்திய பிரீமியர் லீக்கில் மிக இளம் வயதில் தேர்வு செய்யப்பட்ட வீரர் ஆனார் வைபவ் சூர்யவன்ஷி. 2011 இல் பிறந்த அவர், 2008 இல் போட்டி தொடங்கிய பிறகு பிறந்த முதல் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். முந்தைய இளைய ஐபிஎல் அறிமுக வீரர் பிரயாஸ் ராய் பர்மன் ஆவார், அவர் 2019 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 16 வயது மற்றும் 154 நாட்களில் விளையாடினார். இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் ஐபிஎஎஎல் இளைய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார், 2018 இல் 17 வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். ஏலத்திற்கு சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா U19 அணிக்கு எதிராக இந்திய U19 அணிக்காக 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் வைபவ் சூர்யவன்ஷி.அதன் பின்னர் அவர் இலங்கை மற்றும் UAE அணிக்கு எதிராக அரைசதங்களையும், இந்தியாவின் உள்நாட்டு 50 ஓவர் போட்டியில் பரோடா அணிக்கு எதிராக பீகார் அணிக்காக 42 பந்துகளில் 71 ரன்களையும் அடித்துள்ளார்.

Image

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடும் 11 பேர் பட்டியலில் இடம் பெறாமல் இருந்தார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக இடம் பெறாமல் இருக்க துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார் வைபவ் சூர்யவன்சி. ஐபிஎல் இன் தனது முதல் பந்தில் சிக்ஸர் அடித்து துவங்கினார். கடந்த இரண்டு போட்டிகளில் அதிரடி துவக்கம் தந்து முறையே 16 மற்றும் 34 ரன்களில் ஆட்டம் இழந்தார்.ஆனால் திங்கட்கிழமை நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யவன்ஷி, 35 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தினார். இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய இந்தியர் என்ற சாதனையை படைத்த 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்தார்.