பீகாரில் மீண்டும் பாஜக ஆட்சி! வெளியான கருத்துக் கணிப்பு

 
modi modi

பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ம்  தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ம்  தேதியும், இன்றும், இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இன்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன. பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவும், மீதிமுள்ள 122 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்தது.  முதற்கட்ட தேர்தலில் 64.66% வாக்குகள் பதிவான நிலையில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளது.வரும் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. People Pulse நடத்திய கருத்துக்கணிப்பின் படி பாஜக கூட்டணி 133-159 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 75-101 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. People insight நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 133-148 இடங்களில் பாஜக கூட்டணியும், 87-102 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெறும், டைம்ஸ் நவ் நடத்திய ஆய்வின் படி 138-155 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 82-98 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-