மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணி, மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய அணி ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், ஆட்சி அமைக்க தேவையான இடங்களுக்கும் அதிகமாக பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், பாஜக கூட்டணி மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணி 216 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 57 இடங்களிலும், மற்ற கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது.