"சிட்டிங்கில் தேசிய கீதம் பாடிய மம்தா" - கொந்தளிக்கும் பாஜக... போலீசில் புகார்!

 
மம்தா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று மும்பைக்கு வருகை தந்தார். அங்கு அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தேசிய கீதத்தை முழுவதுமாக பாடி முடிக்காமல் பாதியிலேயே அமர்ந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. Bengal polls: BJP registers formal complaint with EC over Mamata's  nomination papers - Elections News

இதனால் தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி மம்தாவை மேற்கு வங்க பாஜக கடுமையாக விமர்சித்தது. "முதலில் கீழே அமர்ந்திருந்த மம்தா பானர்ஜி, பிறகு எழுந்து நின்று இந்தியாவின் தேசிய கீதத்தை பாதியில் பாடுவதை நிறுத்தியுள்ளார். இன்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் அவர் வங்காளத்தின் கலாச்சாரத்தையும், தேசிய கீதத்தையும், நாட்டையும், வங்காள கவிஞர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரையும் அவமதித்துள்ளார்” என்று ட்வீட் செய்துள்ளது.


பாஜக தலைவர்களும் தொண்டர்களும் அந்த வீடியோவை பகிர்ந்து சரமாரியாக விமர்சித்தனர். இச்சூழலில் மும்பை பாஜக நிர்வாகி விவேகானந்த் குப்தா மும்பை காவல் துறையிடம் மம்தா பானர்ஜி மீது புகார் கொடுத்துள்ளார். தேசிய கீதத்தை அவமதித்த மம்தா மீது 1971ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய அவமதிப்பை தடுக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சர்ச்சைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தரப்பிலிருந்தோ மம்தா தரப்பிலிருந்தேஇதுவரை எந்த பதிலும் வரவில்லை.