பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று நேரத்தில் வெளியாகிறது!

 
bjp

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. 

இந்த நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.  டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளனர். . பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட உள்ள தொகுதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.