டெல்லியில் பாஜக அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு??
டெல்லியில் சட்ட விரோத ஆலையை சீலிட சென்றபோது அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
டெல்லி அரசின் உணவு வழங்கல், தொழில்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா. இவர் கடந்த சில வாரங்களாக தலைநகர் டெல்லியில் உள்ள சட்டவிரோத ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
Delhi BJP Minister Manjinder Singh Sirsa denies reports of firing targeting him pic.twitter.com/NBYusDHXbK
— NewsSpectrumAnalyzer (The News Updates 🗞️) (@Bharat_Analyzer) July 2, 2025
அந்தவகையில் இன்று டெல்லியில் உள்ள விஷ்ணு கார்டன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தொழிற்சாலைக்கு சீலிட அதிகாரிகளுடன் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்றும் தகவல் பரவி வந்தது.
மேலும் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது; உண்மையில்லை என்றும் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா விளக்கம் அளித்துள்ளார்.


