லாபத்தில் “BSNL”- மத்திய அரசு தகவல்
தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 2021ம் ஆண்டு முதல் லாபத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019-20ம் ஆண்டில், பிஎஸ்என்எல் நிறுவனம் 15,500 கோடி நஷ்டத்தை சந்தித்த நிலையில், அந்நிறுவனத்தின் தரைவழி இணைப்பு எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலையில் 80 லட்சமாக குறைந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2008ம் ஆண்டு நவம்பரில் 2.9 கோடியாக இருந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதேபோல் பல்வேறு சலுகைகளையும், புதுபுது திட்டங்களை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல் நிறுவனம், 2021ம் ஆண்டு முதல் லாபத்தில் இயங்கி வருகிறது. சிறப்பு என்னவென்றால் 2024ம் ஆண்டில் ஜூன்-அக்டோபர் என 5 மாதத்தில் மட்டும் 87 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்- ல் இணைந்துள்ளனர். இது பிஎஸ்என்எல் மொத்த வாடிக்கையாளரர்களில் 10% அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


