பட்ஜெட் 2022 : நதிநீர் இணைப்பு, இயற்கை விவசாயம் என விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் ..

 
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறுவை விவசாயம்… தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

நாடு முழுவதும் 5 புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2022 - 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.  பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விவசாயம் சார்ந்த அறிவிப்புகள் குறித்து அவர் கூறியவற்றைப் பார்க்கலாம்..

நிர்மலா சீதாராமன்

  • நாட்டில் 1.63 கோடி விவசாயிகளிடமிருந்து 1,208 லட்சம் மெட்ரிக் டன் தாணியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன 
  • வேளாண் பொருட்களுக்கு அடிப்படை ஆதார விலையாக  ரூ.2.73 லட்சம் கோடி  வழங்கப்படும்.
  • இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். ரசாயன உரங்களின் பங்களிப்பு இல்லாத இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
  • எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  •  விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு  உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தொழில்நுட்ப ரீதியான வசதிகள் மற்றும் டிஜிட்டல் விஷயங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை  எடுக்கப்படும். 

விவசாயம்

  • மேலும், ட்ரோன்  மூலம் விவசாய நிலங்களை அளப்பது மற்றும் விளைச்சல்களை  கணிப்பது  போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
  • கிசான் ட்ரோன்களின் மூலம் பூச்சுக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தெளித்தல் ஆகியவை ஊக்குவிக்கப்படும். 
  • நாடு முழுவதும் 5 புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு விரிவான திட்ட  அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
  •  அதில், கோதாவரி-கிருஷ்ணா,  காவிரி- பெண்ணாறு திட்டங்களும் அடங்கும் என தெரிவித்துள்ளார்.
  • மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த நிதியுதவி அளிக்கப்படும்.
  • 2022 ஆம்  ஆண்டு  அறுவடைக்குப் பிந்தய திணை உற்பத்திக்கான மதிப்புக் கூட்டலுக்கு உதவிடும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • 9 லட்சம் ஹெக்டேர் வொவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் கென் - வாட் இணைப்புத்  திட்டம் மேற்கொள்ளப்படும்.