Budget 2024: வருமான வரியில் புதிய சலுகைகள்..

 
tax

தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.  

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மக்களவையில் வாசித்தார்.  பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி விலக்கு என்பது பெரும் ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. ஏனெனில்  நடப்பு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. இந்த நடைமுறையில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Budget 2024:  வருமான வரியில் புதிய சலுகைகள்.. 

அதேநேரம், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் முதல் ரு. 7 லட்சம் வரை இருந்தால் 5 சதவீதம் வருமானவரி செலுத்த வேண்டும் எனவும், ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை இருந்தால்   10% வரி விதிக்கப்படுகிறது.

ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.12 லட்சம் வரையான வருமானத்துக்கு 15%, ரூ. 12 லட்சத்துக்கு மேல் ரூ.15 லட்சம் வரையான வருமானத்துக்கு 20%, ரூ. 15 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30% வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.  

புதிய வரி முறையின் கீழ், தனிநபரின் நிகர வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருந்தால், பிரிவு 87A இன் கீழ் வரி தள்ளுபடி பெறலாம். தள்ளுபடி தொகை வருமான வரியில் 100 சதவீதம் அல்லது ரூ 25,000 ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.  இந்த புதிய வருமான வரி திட்டத்தில் நிரந்தரக் கழிவு ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.