"வேளாண் உற்பத்தி பொருட்கள் 33% உயர்வு ; டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் பேருதவி "- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை!

 
ttn

ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது. 

tn

2022 -23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று  நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தொடங்கியது.இந்நிலையில் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் உரையை தொடங்கினார். அதில், "75வது சுதந்திர தின விழா இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய, உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எனது வீர வணக்கம். வஉசி, நேதாஜி ஆகிய தலைவர்களின் தியாகத்தை நினைவுகூர்கிறேன். நேதாஜி 125வது பிறந்தநாளை அரசு சிறப்பாக கொண்டாடுகிறது" என்றார். 

tn
தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசு திட்டங்கள் உள்ளது. மூத்த குடிமக்கள் 90% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா 3வது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது.இந்திய தயாரிப்பு தடுப்பூசி உலகம் முழுவதும் 180 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது; கடுமையான சவாலான காலத்திலிருந்து இந்தியா ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளதுஇந்தியா கொரோனாவால் கடுமையான சவால்களை சந்தித்தது; இருப்பினும், ஒரே ஆண்டில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு எனது வாழ்த்துகள். கடந்த காலங்களை விட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது; ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை மக்கள் சுகாதார திட்டங்களை பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது" என்றார்.

ttn

மேலும், "நாட்டின் அனைத்து  கிராமங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கிறது. பொருளாதாரத்தில் கடும் பாதிப்படைந்த ஏழைகளுக்கு நேரடியாக பணம் கிடைப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது; டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொரோனா பொதுமுடக்க காலத்தில் அனைவருக்கும் பேருதவியாக இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கான நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது; கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவின் மொத்த வேளாண் உற்பத்திப் பொருட்களின் சதவிகித 33% அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்