#Budget2024: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. முழு விவரம் இதோ..
2024-25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% லிருந்து 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு ₹ 1,25,638 கோடி ஒதுக்கீடு
சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு
மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு..
வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.1,51,851 கோடி நிதி ஒதுக்கீடு
ஆந்திர மாநில வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு
பீகார் மாநில வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு

5 ஆண்டுகளுக்கு, நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ₹2.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!
நாட்டின் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களுக்கு ரூ.4,54,773 கோடி ஒதுக்கீடு
கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.2,65,808 கோடி ஒதுக்கீடு
உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான பணிகளுக்கு ரூ.1,50,983 கோடி ஒதுக்கீடு
தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.1,16,342 கோடி ஒதுக்கீடு

சுகாதாரத்துறைக்கு ரூ.89,287 கோடி ஒதுக்கீடு
எரிசக்தி துறைக்கு ரூ.68,769 கோடி ஒதுக்கீடு
சமூக நலத்துறைக்கு ரூ.56,501 கோடி ஒதுக்கீடு
வணிகம் மற்றும் தொழில் துறைக்கு ரூ.47,559 கோடி ஒதுக்கீடு
நாட்டின் விண்வெளி சார்ந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு
அசாம், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு
2024 - 25ம் நிதியாண்டிக்கான மூலதன செலவினத்திற்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024 - 25ம் நிதியாண்டிக்கான கடன் அல்லாத மொத்த வரவுகல் ரூ.2.07 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுல்ளது. அத்துடன் மொத்த செலவு ரூ.48.21 லட்சம் கோடியாகவும், நிகர வரி ரூ.25.83 லட்சம் கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024-25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக குறையும். 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


