சீட்டுக்கட்டு போல் நொடியில் சரிந்த 2 மாடி வீடு! கர்நாடகாவில் பரபரப்பு

 
s

கர்நாடகா  கோலாரில் சுவரை உடைக்கும் போது தவறுதலாக முக்கிய தூண் இடிக்கப்பட்டதால் 2 மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் கேஇபி சாலையில் மூன்று மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது. இந்தக் கட்டிடம் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமானது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடத்தை அவர் கட்டியுள்ளார். மேலே உள்ள இரண்டு மாடிகளில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ள நிலையில் கீழ்தளத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் தங்கியுள்ளார். கீழ் தளத்தை புதுப்பிக்க கட்டுமான பணியில் கடந்த சில நாட்களாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது தவறுதலாக கட்டிடத்தின் முக்கிய தூணை அவர்கள் இடித்த நிலையில் கட்டிடம் இடிந்து விழப் போகிறது என்பதை தீயணைப்பு படையினர் முன்கூட்டியே கணித்து உடனடியாக மூன்று மாடிகளில் இருந்த அனைத்து மக்களும் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

மூன்றுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதன் எதிரே இருந்த பள்ளி வளாகம் சேதமடைந்துள்ளது. தற்பொழுது கட்டிடத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பை துண்டித்து விட்டு இடிபாடுகளை அகற்றும் பணியும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.