டிடிஎஃப் வாசன் மீது திருப்பதியில் வழக்குப்பதிவு

 
டிடிஎஃப் வாசன் மீது திருப்பதியில் வழக்குப் பதிவு

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது திருப்பதி திருமலை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் ரீல்ஸ் .. திருந்தாத டிடிஎப் வாசன்.. தேவஸ்தானம் கடும்  கண்டனம்..!


டிடிஎஃப் வாசன் சிறார்களை கவர்வதற்கு பைக் ஓட்டும்போது பல வித்தைகளை காண்பித்து வழக்குகளை சந்தித்து வருகிறார். இவ்வாறு  பைக் வித்தை காட்ட முயன்று டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கி அவருக்கு கை, கால்கள் உடைந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்காக வழக்கை சந்தித்து, நீதிமன்றத்தின் மூலம் பைக் ஓட்டும்  உரிமத்தை நீதிமன்றம்  ரத்து செய்தது. இதனால் பைக் ஓட்டுவதை நிறுத்தி தற்போது எங்கு சென்றாலும் காரில் தான் பயணம் மேற்கொள்கிறார்.

சமூகவலைதளத்தில் தொடர்ந்து  சர்ச்சைக்கு உண்டாக பதிவுகளை போட்டு பிரபலம் ஆவதை வழக்கமாக கொண்டுள்ள  டிடிஎஃப் வாசன், திருப்பதியில் தரிசனம் செய்ய சென்றபோது பிராங்க் வீடியோ எடுத்து டிடிஎஃப் வாசன் வெளியிட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது திருப்பதி திருமலை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.