இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்

 
z z

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனடியாக ‍நிறுத்தப்படுவதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

Image

இந்தியா- பாகிஸ்தான் இடையே அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் மாலை 3.30 மணிக்கு தொலைபேசியில் பேசுவர் என்றும்,  இரு நாடுகளின் டிஜிஎம்ஓ அதிகாரிகள் மே 12 ஆம் தேதி பேச்சு நடத்துவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உடனடி போர் நிறுத்தத்திற்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், முழுமையான போர் நிறுத்தத்திற்கு இந்தியா, பாகிஸ்தான்ஒப்புக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதேபோல் போர் நிறுத்தத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  மார்கோ ரூபியோ, இந்தியா, பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சி. நடுநிலையான இடத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை தொடங்குவதாகவும் அறிவிப்பதில் மகிழ்ச்சி. அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர் மோடி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம், அரசியல் திறமைக்கு பாராட்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.