அதிகரிக்கும் ஒமைக்ரான் : தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்தியக் குழு...

 
ஒமைக்ரான்


இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.  நாடுமுழுவதும் 17 மாநிலங்களில் 415 பேருக்கு  ஒமைக்ரான் தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது.   ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த  இரவு நேர உரடங்கு அமல்படுத்துவது, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது போன்ற பரிந்துரைகளை மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே வழங்கியிருக்கிறது.

மத்திய அரசு

அதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க மத்திய அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது.  மேலும் இந்தக்குழு தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டாத மாநிலங்களுக்கு நேரில் அறிவுறுத்தல் வழங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த மத்தியக்குழு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க  இன்று தமிழகம் உள்பட 10- மாநிலங்களுக்குச் செல்ல இருக்கிறது.

ஒமைக்ரான்

அதன்படி, இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், கேரளா, கர்நாடகம், மிசோரம், பிஹார், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இந்த மத்தியக்குழு செல்கிறது.  இந்தக்குழு மாநிலங்களில்  ஒமைக்ரான் பரவல் எந்த அளவில் இருக்கிறது, என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அனைத்துவிதமான ஆய்வுகளையும் செய்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.