ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய மத்திய அரசு!

 
Army Army

போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு பணியாளர்களை சேர்க்கவும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வீரர்களை எல்லையோர பகுதிக்கு அழைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.