நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!

 
Parliament

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் 29ம் தேதி திறந்து வைத்தார். மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட்11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களை கவரும் வகையில் பல முக்கிய திட்டங்கள் அறிவிப்புகள் இந்த கூட்டத்தொடரில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் மழைக்கால கூட்டத்தொடரிலும் முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதேபோல் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியது குறித்தும் கேள்வி எழுப்புவார்கள். 

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு ஜூலை 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.