மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் - மத்திய இணையமைச்சர் அதிரடி

 
Manipur

மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங் குற்றம் சாட்டியுள்ளார். 

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். அதற்கு சூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த  மே மாதம் 03ம் தேதி மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக வெடித்தது. மோதல் தொடங்கி 2 மாதங்கள் ஆன போதிலும் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

manipur

இந்த நிலையில், மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், 2017ஆம் ஆண்டு வரை மணிப்பூர் மாநிலத்தை காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது செய்த தவறுகளே தற்போது மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடக்க காரணம் என கூறினார்.