5 மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

 
tn

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, வங்கதேசத்தில் கரையை கடக்கும்  என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வடக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்கதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ,நாகாலாந்து, ஒடிசா ,மணிப்பூர்  உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட்,  சத்தீஸ்கர்,  பீகார்,  மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  நாளை மறுநாள் முதல் மீண்டும் மழை படிப்படியாக குறைய தொடங்கும் என்று வானிலை  ஆய்வு மையம் கூறியுள்ளது.