8 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய Chewing gum! மூச்சுத்திணறிய சிறுமி

 
/ /

கேரளாவில் எட்டு வயது பெண் குழந்தையின் தொண்டையில் சுவிங்கம் மிட்டாய் மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடிய குழந்தையின் உயிரை இளைஞர்கள் போராடி காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


கேரள மாநிலம் கண்ணூரில் எட்டு வயது குழந்தை பாத்திமா கடையில் சிவிங்கி மிட்டாய் வாங்கி வாயில் போட்டுவிட்டு தனது சைக்கிளை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் தொண்டையில் சிவிங்கி மிட்டாய் சிக்கி உள்ளது. மூச்சு விட முடியாமல் தவித்த குழந்தை அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் தன் நிலைமையை சைகை மூலம் தெரிவித்துள்ளார். முதலில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த இளைஞர்கள், பின்னர் சுதாகரித்து குழந்தை  தொண்டையில் ஏதோ சிக்கி மூச்சு விட முடியவில்லை என்பதை உணர்ந்து உடனடியாக செயலில் இறங்கி தொண்டையில் சிக்கியிருந்த சிவிங்க மிட்டாயை வெளியே எடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.



இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி. வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி குழந்தையின் உயிரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.