அடித்து துன்புறுத்துவதாக பிரபல நடிகர் மீது மகன் போலீசில் புகார்
Dec 8, 2024, 13:21 IST1733644316610
தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது, அவரது மகனும், நடிகருமான மஞ்சு மனோஜ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் மஞ்சு மனோஜ் காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த புகாரில் நடிகர் மோகன் பாபு தன்னையும், தன் மனைவியையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சொத்து தகராறில் சொந்த தந்தை மீதே, அவரது மகன் மனோஜ் குற்றஞ்சாட்டியுள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மனோஜ் தாக்கியதாக, மோகன் பாபு புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மனோஜும் புகார் அளித்துள்ளார். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறுவதால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.


