குஜராத்தில் இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை.. அலறியடித்து ஓடிய மாணவர்கள்..

 
wall collapsed wall collapsed


குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்தார். 

குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியில் அமைந்துள்ள தனியார்  பள்ளியொன்றின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில்  உணவு இடைவேளையின்போது மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வகுப்பறையின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சுவர் ஓரமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சில மாணவர்கள் கிழே விழுந்தனர். 


அவர்களில்  7ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சைக்கிள் பார்க் செய்யும் இடத்தின் மீது சுவர் விழுந்ததால்,10-12 சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததும், மாணவர்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள்  பள்ளி வகுப்பறையில் பொருத்தப்படிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.