முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் - புதுச்சேரியில் இலவச பேருந்து சேவை!!

 
tn

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் இலவச பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

stalin

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 69 ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. 50 ஆண்டுகால உழைப்பின் காரணமாக திமுக தலைவராக பொறுப்பேற்று, தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்து வருகிறார். முதல்வராக பதவியேற்ற பின் கொண்டாடப்படும் பிறந்தநாள் என்பதால் திமுகவினர் ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். கட்சி கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கி, ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.

tn

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்ட விழா புதுச்சேரியில் தற்போது களைகட்ட தொடங்கிவிட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் திமுக சார்பில் இலவச பேருந்து சேவையை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார். முன்னதாக முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  ‘உங்களில் ஒருவன்’ என்கிற ஸ்டாலினின் வரலாற்று புத்தகத்தை  ராகுல் காந்தி எம்.பி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.