நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சனை : இருளில் மூழ்கும் இந்தியா!

 
coal ttn


நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

நாட்டின் மொத்த மின் தேவை என்பது நிலக்கரி  அனல்மின் நிலையங்களின்  மூலமே கிடைக்கிறது ஆனால் இந்தியா முழுவதிலும்  அனல்மின் நிலையங்களில் சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  135  அனல் மின் நிலையங்களில் சுமார் 50% க்கும் அதிகமானவை  நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

coal

தமிழகத்தை பொருத்தவரை தினசரி மின் தேவை என்பது 40 ஆயிரம் மெகாவாட். இது கோடை காலங்களில் 17 மெகாவாட்டாக உயர்கிறது . இதனால் அனல் மின் நிலையங்கள் மூலமாக தினமும் 4320 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது.  தற்போது மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு இல்லாததால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . வட சென்னை ,தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் வெறும் 4 மாதங்களுக்கு மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் காரணமாக தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மத்திய அரசிடமிருந்து போதிய நிலக்கரியை பெற்று மின்வெட்டு வராமல் தடுக்க அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ttn

டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தினசரி ஒரு மணி நேரம் மின்வெட்டு என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநில முதலமைச்சர்கள் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பெய்த கனமழை காரணமாக நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி என்பது பாதிக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டில் உற்பத்தி இல்லாத காரணத்தினால் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது . அத்துடன் கடந்த சில வாரங்களில் நிலக்கரியின் விலை  அதிகரித்துள்ளது.  இதற்கு காரணம் உலகம் முழுவதுமே நிலக்கரியின் தேவை சுமார் 40 சதவிகிதம் அதிகமாகியுள்ளது.  கொரோனாவால் மின்தேவை குறைந்திருந்த நிலையில் தற்போது கொரோனாவிலிருந்து இந்தியா மீண்டு வருவதால் மீண்டும் மின்தேவை என்பது அதிகரித்துள்ளது. இதனால் மின்தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.