அதிரடியாக குறைந்த வர்த்தக சிலிண்டர்களின் விலை... ரூ.102.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு..

 
Commercial LPG cylinder

புத்தாண்டு நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலையை ரூ. 102.50 குறைத்து அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  நிர்ணயித்து வருகின்றன.  இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர்களிம் விலை மாதம் இருமுறை மாற்றம் செய்யப்படுகிறது.  

Commercial LPG cylinder

அந்தவகையில் இன்று  ( ஜனவரி  1 - சனிக்கிழமை ) வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து அறிவித்துள்ளன. அதன்படி டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் ரூ.102.50 குறைந்து,  ரூ.1,998.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 14.2  கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில்  எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதேபோல் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களின் விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படாமல் , அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

cylinder

ஏற்கனவே  19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை கடந்த நவம்பர் மாதம் 266 ரூபாயும், டிசம்பர் மாதம்  ரூ. 100 அதிகரித்து ரூ. 2,200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த விலை குறைப்பால்  உணவக உரிமையாளர்கள் மற்றும் உணவுப்பொருள் சார்ந்த வியாபாரிகல் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.