மோடியின் உத்தரவாதம் அவரது பணக்கார நண்பர்களுக்கு மட்டுமே - மல்லிகார்ஜுன கார்கே

 
kharge

பிரதமர் மோடியின் உத்தரவாதம் நாட்டிலுள்ள விவசாயிகள் இல்லை, அவருடைய பணக்காரர நண்பர்களுக்கு மட்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 

காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிஜார்ஜுன கார்கே பேசியதாவது: மோடி அவர்களின் உத்தரவாதம் நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இல்லை.  நாட்டில் இருக்கும் 2-3 அவருடைய பணக்காரர நண்பர்களுக்கு மட்டும்.  திரு மோடியின் நண்பர்களின் ரூ.13 லட்சம் கோடி கடன் தள்ளுபடி. அதேசமயம், 12 முதல் 13 ஆயிரம் வரை கடன் வாங்கி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  பணக்காரர்கள் மீதான வரி குறைக்கப்படுகிறது, ஏழைகள் மீதான வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. 
 பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் மானியம் வழங்கப்படுகிறது, ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கு மானியங்கள் நீக்கப்படுகின்றன. 
 மோடி அரசின் 10 ஆண்டுகளில் 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  

Rahul and Kharge

முதன் முறையாக, நாட்டின் விவசாயிகள் மீது பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டன. டிராக்டர்கள், உரங்கள், இயந்திரங்கள் மீது விதிக்கப்பட்ட GST.   மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது விவசாயிகளின் ரூ.72 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்தோம். பல காங்கிரஸ் மாநில அரசுகள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தன.  காங்கிரஸின் 10 ஆண்டுகளில், நெல்லின் MSP 135% அதிகரித்தது, அதேசமயம் பாஜக ஆட்சியில் இந்த MSP 50% மட்டுமே அதிகரித்துள்ளது.  நாங்கள் விவசாயி நீதியைப் பற்றி பேசுகிறோம், அதனால்தான் காங்கிரஸ் கட்சி அனைத்து விவசாயிகளுக்கும் வாக்குறுதி அளிக்கிறது - MSP உத்தரவாத சட்டம் என குறிப்பிட்டுள்ளார்.