செங்கோட்டையில் நடைபெற்ற சுந்தந்திர தின விழாவில் பங்கேற்காதது ஏன் - மல்லிகார்ஜுன கார்கே விளக்கம்

 
Mallikarjuna Kharge

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுந்தந்திர தின விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாதது ஏன் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். 

நாட்டின் 77 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்திய நிலையில் , செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிய நிலையில்,  தேசிய கீதம் இசைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி 140 கோடி மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன் என கூறினார். 

tn

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுந்தந்திர தின விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  காலை 9.20 மணிக்கு எனது இல்லத்திலும், பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இருந்ததால் என்னால் செங்கோட்டைக்கு வர முடியவில்லை. ஒருவேளை செங்கோட்டை நிகழ்வில் கலந்துகொண்டால்,  பிரதமர் புறப்படுவதற்கு முன்னதாக மற்றவர்கள் அங்கிருந்து புறப்பட முடியாது. இதனால் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போகும். அதனால் தான் செங்கோட்டை விழாவில் கலந்துகொள்ளவில்லை என கூறினார்.