இந்தியா என்பது ஒரே மதம், ஒரே கலாசாரம் அல்ல - ராகுல் காந்தி

 
rahul

இந்தியா ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே வரலாறு கொண்டது அல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் 77 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்திய நிலையில் , செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிய நிலையில்,  தேசிய கீதம் இசைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி 140 கோடி இளைஞர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன் என கூறினார். இதேபோல் தலைவர்கள் பலரும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Rahul

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரத மாதா என்பது வெறும் நிலம் அல்ல. இந்தியா ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே வரலாறு கொண்டது அல்ல. ஜாதிகளும் அல்ல. இந்தியா என்பது ஒவ்வொரு தனிப்பட்ட இந்தியனின் பலமான குரல். அந்த குரல்களுக்குப் பின்னால் இருக்கும் மகிழ்ச்சி, பயம் மற்றும் வலி தான் இந்தியா. அமைதியாகவும், பணிவாகவும் இருப்பவர்களால் மட்டுமே இந்தியாவின் குரலை கேட்க முடியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.