"மக்களுக்கு அல்வா கொடுத்த பட்ஜெட்" - ராகுல் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த ரீயாக்சன்

 
நிர்மலா

பட்ஜெட் மீதான விவாதத்தின் போது எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகிவருகிறது.

மக்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “அரசின் வரி தீவிரவாதத்தால் இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய இளைஞர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? புதிதாக கொண்டுவரப்பட்ட இண்டர்ன்சிப் திட்டத்தால் பெரு நிறுவனங்கள்தான் பயன்பெறும். நாடு முழுவதும் வினாத்தாள்கள் கசிந்துள்ளன.கடந்த 10 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. இதுகுறித்து பட்ஜெட்டில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா? பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராணுவத்தில் இணைந்துள்ள அக்னி வீரர்களின் பென்சனுக்காக ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ராணுவத்தில் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் எதுவும் தரப்படுவதில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. நாட்டு மக்களுக்கு அல்வா கொடுக்க 20 பேர் இணைந்து பட்ஜெட் தயாரித்துள்ளனர். பட்ஜெட் அல்வாவின் பெரும் பகுதி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். பணமதிப்பிழப்பால் வேலைவாய்ப்பு இல்லாத் நிலை தொடர்கிறது. இளைஞர்களுக்கு பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. மோடியின் சக்கரவியூகத்தில் மக்கள் அபிமன்யூ போல சிக்கி உள்ளனர்” என்றார். 

முன்னதாக நாட்டு மக்களுக்கு அல்வா கொடுக்க 20 பேர் இணைந்து பட்ஜெட் தயாரித்துள்ளனர் என ராகுல் கூறுகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் அடித்தபடி சிரித்துக்கொண்டிருந்தார்.