10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா!

 
m

10 அமைச்சர்கள் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக துணை முதல்வர் வெளியிட்ட தகவலால் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் தகவல் தெரிவித்திருக்கிறார்.   பாதிப்பு ஏற்பட்டுள்ள அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

mg

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து  கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.  கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 67 ஆக பதிவாகி இருக்கிறது . இந்த எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமை எண்ணிக்கையை காட்டிலும் 50 சதவிகிதம் அதிகம் என்று தெரியவந்திருக்கிறது . 

mm

மகாராஷ்டிராவில் உள்ள மும்பை மற்றும் புனே கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்து வருகின்றது என்றும்,  நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 மகாராஷ்டிராவில் வேகமாக பரவி வருகிறது இதற்கான எச்சரிக்கையை பொதுமக்கள் கண்டிப்பாக உணர வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார் .  இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட மோடி அறிவித்திருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.