இந்தியாவில் 8,000க்கு கீழே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

 
Covid Positive

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8000க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், தற்போது குறைய தொடங்கியுள்ளது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இதனிடையே மே மாதம்  கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்றும் இன்னும் சுமார் பத்து நாட்களில் இந்த  உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இதனிடையே நேற்று இந்தியாவில் 9111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8000க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5,31, 152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 60,313 லிருந்து 61, 233 ஆக உயர்ந்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,27, 226 லிருந்து 4,48,34,859 ஆக உயர்ந்து உள்ளது.