ஜெட் வேகத்தில் உயரும் தினசரி கொரோனா பாதிப்பு - நேற்றை விட 40% அதிகரிப்பு

 
covid

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 40 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் 1,573 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்ட நிலையில், நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் பதிவான தினசரி கொரோனா பாதிப்புகளை விட அதிகம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மத்திய சுகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கயில் ஒரு நாள் பாதிப்பு 3016- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,509- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.