நிலத்தில் மாடு நுழைந்ததால் தலீத் பெண்ணை கட்டிவைத்து தாக்கிய கொடூரர்கள்

 
women attack

நிலத்தில் மாடு நுழைந்த காரணத்திற்க்காக பட்டியலின பெண் மீது மேல்ஜாதி வகுப்பை சேர்ந்த ஒருவன் செருப்பால் அடித்துள்ள சம்பவம் கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கனககிரி தாலூகா ராம்பூரா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. 

Karnataka: Dalit woman assaulted after her cattle strayed in field  belonging to upper-caste man

கடந்த 3-ம் தேதியன்று நிலத்தில் மாட்டை மேய்க்க வந்த பட்டியலின பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவருக்கு சொந்தமான பசுவை மேல் ஜாதி வகுப்பை சேர்ந்த அமரேஷப்பா என்பவன் கட்டி போட்டுள்ளான். பசுவின் உரிமையாளரான 30 வயதான பெண் ஷோபம்மா அங்கு பசுவை மீட்க சென்ற போது அமரேஷப்பா ஆபாச வார்த்தைகளால் அவரை திட்டி செருப்பால் அடித்துள்ளார். தவிர ஆபாசமாக திட்டியும் உள்ளார். அவளுடைய இனம், மதம் குறித்து திட்டியுள்ளார். 

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தான் தாக்கப்பட்ட பிறகு ஷோபம்மா கங்காவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஷோபம்மாவை அமீரேஷப்பா தாக்கியுள்ள வீடியோ வைரலான நிலையில் அதை ஆதாரமாக கொண்டு கனககிரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பட்டியலின மக்களுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு எதிரான சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. ஆனால் இதுவரை அமீரேஷப்பா கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.