விநாயகர் ஊர்வலத்தில் காந்தாரா பாடலுக்கு நடனம்- தீப்பற்றி 8 பேர் காயம்

 
தீவிபத்து

ஆந்திராவில் விநாயகர்  ஊர்வலத்தில்  காந்தார பாடலுக்கு சுற்றிலும் தீவை  நடனமாடிய போது தீ விபத்து ஏற்பட்டபோது ஆறு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.

గణేష్‌ నిమజ్జనం ఊరేగింపులో విషాదం | 13 Years Old Boy Died Due To Electric  Shock During Ganesh Immersion Narsaraopet - Sakshi


ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு மண்டலம் எர்ரகுண்ட்லா பகுதியில் நேற்று இரவு விநாயகர் விசர்ஜனம் செய்ய ஊர்வலமாக விநயாகர் சிலை கொண்டு செல்லப்பட்டது. அப்போது  ஆடல் பாடல்களுடன் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாட்டுப்புற கலைஞர்கள் காந்தாரா படத்தில் வருவது போன்று வராக ரூபம் படாலுக்கு ஏற்ப இரண்டு கலைஞர்கள் படத்தில் வருவது போன்று வராக ரூபம் வேடம் அணிந்து சுற்றிலும் தீ வைத்து நடனம் ஆட முடிவு செய்தனர். 

ஒருவர் கலைஞர்களை சுற்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில், அங்கு வேடிக்கை பார்க்க வந்த 6 சிறுவர்களுடன் நடனம் ஆட இருந்த கலைஞர்கள் மீது தீ பிடித்து கொண்டது. உடனடியாக காயம் அடைந்தவர்களை ஜம்மலமடுகு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில்  இருவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.  விநாயகர் ஊர்வல கொண்டாட்டத்தில் அலட்சியத்தால் தீ விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.