மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவர் வழக்கில் அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் ..!!
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் , ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறபித்துள்ளது..
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் புகாராக எழுந்து வந்தது. அதிலும் தமிழ்நாடு அரசு , தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சட்டபேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவர் , ஆளுநர்களுக்கு மசோதாக்கள் மீது காலக்கெடு நிர்ணயித்த தீர்ப்பின் மீது குடியரசுத் தலைவர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. தீர்ப்பு தொடர்பாக 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் முன்வைத்திருந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கள் ஆகிய 5 நீதிபதிள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் குறித்து அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிள், இதுதொடர்பான விசாரணை அக்டோபர் 2ம் வாரத்தில் தொடங்கும் எனக்கூறினர். மேலும் இந்த வழக்கு விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்து அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.


