கொரோனா வைரஸை விட நிபா வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிக அதிகம் - அதிர்ச்சி தகவல்

 
கேரளாவை மிரட்டும் ‘நிபா வைரஸ்’… 12 வயது சிறுவன் பரிதாப மரணம்!

கொரோனா வைரஸை விட நிபா வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிக அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் ராஜீவ் பாஹல் கூறியுள்ளார். 

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. நேற்று மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக மொத்த பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு வருகிற 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

 கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி… சிகிச்சை அளித்த நர்ஸும் பாதிப்பு!

இந்த நிலையில், கொரோனா வைரஸை விட நிபா வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிக அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் ராஜீவ் பாஹல் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கேரளாவில் நிபா வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை விட நிபா வைரஸால் அதிகம் இறப்படுகள் ஏற்படும். கொரோனா வைரஸால் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரையில் தான் இறப்பு விகிதம் இருந்தது. ஆனால் நிபா வைரஸால் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இறப்பு ஏற்படலாம். இவ்வாறு கூறினார்.