இமாச்சல பிரதேசத்தில் கனமழை, வெள்ளம் - பலி எண்ணிக்கை 90ஐ நெருங்கியது

 
Himachal Pradesh

இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஐ நெருங்கியுள்ளது.  

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.   வளிமண்டல மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக வடமாநிலங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.  பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஐ நெருங்கியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் அம்மாநிலத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 39 பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து அம்மாநிலத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் தங்கியுள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.