சீக்கிம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

 
Sikkim

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. 

சிக்கிம் மாநிலத்தில்  லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, தீஸ்தா நதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தேடும் பணி தீவிரமடைந்துள்ளன.  அத்துடன் வெள்ளப்பெருக்கால் NH-10 தேசிய நெடுஞ்சாலை நீரில் மூழ்கியது. அதேபோல் தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர். இந்நிலையில் சிக்கிமில் உள்ள தெற்கு லோனாக் ஏரி திடீரென உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 82 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏராளமானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.