மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் - ராஜ்நாத் சிங்

 
Defence Minister Rajnath singh

மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுமென்றே அவையை முடக்குகின்றனர் எனவும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாதி சிங் கூறியுள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் மாதம்  11 ஆம் தேதி வரை  இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.  நேற்று இரு அவைகளும், தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி அவரையும் ஒத்திவைக்கப்பட்டது. இரு அவைகளும் மீண்டும் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் திரும்பவும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதேபோ இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Lokh sabha


 
இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இரு அவைகளிலும் மணிப்பூர் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அறிக்கை தாக்கல் செய்வார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுமென்றே அவையை முடக்குகின்றனர். இவ்வாறு கூறினார்.