டெல்லி குண்டுவெடிப்பு- உயிரிழப்பு 13ஆக உயர்வு

 
உயிரிழப்பு 13ஆக உயர்வு உயிரிழப்பு 13ஆக உயர்வு

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்தது. இதில் அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. தகவலறிந்தவுடன் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. மேலும் காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கார் வெடித்துச் சிதறியதில் மேலும் சில வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக டெல்லி தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவ இடத்திற்கு விரைகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. முன்னதாக டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமித்ஷா நேரில் சந்தித்தார்.