"குண்டு வெடிப்பு... குற்றவாளிகள் அனைவரையும் வேட்டையாடுங்கள்"- அமித்ஷா
டெல்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் வேட்டையாட உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
![]()
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வது நுழைவு வாயில் அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் டில்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்து டெல்லியில் உள்துறை உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு ஆலோசனை மேற்கொண்டார். இதில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் வேட்டையாட உத்தரவிட்டுள்ளார். குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரும், அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள். காா் வெடிப்பில் தொடா்புடைய ஒவ்வொருவரும் எங்களது கோபத்தை எதிா்கொள்வாா்கள் என்றும் அவர் கூறினார்.


